நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பத்தாண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ, மாணவிகளில் ஏழு பேர் தற்போது தேனி, கோவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்களிம் வாட்ஸ் அப் மூலம் சமீபத்தில் ஒன்றிணைந்து தாங்கள் படித்த பள்ளி மூலம், அப்பகுதி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் படித்த பள்ளியில் இலவச மருத்துவ முகாமை நடத்தினர். அதில் பொது மருத்துவம், பல் மருத்துவம், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.