நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம் (50). அமமுக பிரமுகரான இவர் துணிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இவருடைய மகன் முகேஷ் கண்ணன் (20). இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். மகன் காதலிப்பதை கருப்பு நித்யானந்தம் விரும்பவில்லை. இதனால் அந்த பெண்ணை தன்மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச்சென்று அப்பெண்ணுக்கு தாலி கட்டி, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கருப்பு நித்யானந்தம், இதற்கு உடந்தையாக இருந்த சக்திவேல், பவுன்ராஜவள்ளி ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அந்த மூன்று பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க வேதாரண்யம் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தன் தந்தையால் காதலி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் காதலித்த பெண்ணைக் கைவிட மாட்டேன் எனக் கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார். வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்தில் காவலர்கள் முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்க:காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி கடத்தல்: மீட்டுத் தருமாறு கணவர் புகார்