மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், நாடு முழுவதும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநிலத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காரைக்காலை அடுத்த திருப்பட்டினத்தில் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பேரணி நடைபெற்றது.
பேரணியில், திமுக, காங்கிரஸ், மதிமுக , விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளுடன் இஸ்லாமிய பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
திருப்பட்டினத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து போலகம் என்ற இடத்தில் நிறைவடைந்தது.
சிஏஏவிற்கு எதிராக இஸ்லாமியர்கள் 1500 பேர் பேரணி ஊர்வலம் இதையும் படியுங்க:கலாசாரம் குறித்து குமரி முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணம்