தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு! - Opening of schools

மயிலாடுதுறையில் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் இன்றும் (ஜன. 7) கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

By

Published : Jan 7, 2021, 1:34 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி வரும் பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கலாமா என்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் அரசு பள்ளி ஒன்றில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இதேபோல் மணல்மேடு, காளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்துகொண்டு பள்ளியில் அளித்த படிவத்தை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இன்றும் கருத்து கேட்பு!

ABOUT THE AUTHOR

...view details