தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் இந்த ஆண்டிலும்: மீனவர்கள் அதிருப்தி! - Arukattutturai Harbour plan return this budget

நாகை: கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆறுகாட்டுத்துறையில் துறைமுகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், இந்த வருடமும் அதே அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதால் மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆறுகாட்டுத்துறை துறைமுகம்  தமிழ்நாடு பட்ஜெட்  Arukattutturai Harbour plan return this budget  Arukattutturai Harbour plan
பட்ஜெட் குறித்து மீனவர்கள்க கருத்து

By

Published : Feb 14, 2020, 11:31 PM IST

சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது, ஆறுகாட்டுத்துறையில் துறைமுகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு கடந்த பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டதாக நாகை மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய மீனவர்கள், ஏற்கெனவே கடந்த ஆண்டு அறிவித்த திட்டத்தை இந்த ஆண்டும் பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது என்றும் மீன்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை, எந்ததெந்தப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பட்ஜெட் குறித்து மீனவர்கள்க கருத்து

மேலும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு உடனடியாக ஆறுகாட்டுத்துறை துறைமுகப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றும் தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எவ்வாறு செலவிடப்படும் என்பதனையும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:'மாநில பட்ஜெட்டிலும் எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது'

ABOUT THE AUTHOR

...view details