தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் - arudra festival in nagapattinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம்

By

Published : Dec 20, 2021, 1:16 PM IST

Updated : Dec 21, 2021, 10:42 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜபெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.

இக்கோயிலில் கடந்த 17 ஆம் தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் தொடங்கி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ண மலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சுவாமிக்கு யாக சாலையிலிருந்து ரட்சை பெறப்பட்டு வைக்கப்பட்டு சோடஷ உபசாரம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மகா தீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவ குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயிலில் 'ஆருத்ரா தரிசனம்' விழா

Last Updated : Dec 21, 2021, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details