தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா! - நடராஜ பெருமான் வீதியுலா

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Arudra Darshan Festival
Arudra Darshan Festival

By

Published : Jan 11, 2020, 2:37 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி மாயூரநாதர் சந்நிதியில் உள்ள நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, ஓதுவா மூர்த்திகள் திருவெம்பாவை பாடல்கள் பாடி பூஜித்தனர். பின்னர் கோபூஜை நடைபெற்று, நடராஜ பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இன்று மதியம் நடராஜ பெருமான் வீதி உலா, ஊடல் உற்சவம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறயுள்ளது.

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா

மேலும் மாயூரநாதர் ஆருத்ரா தரிசன விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுடன் உரையாடிய நாசா விஞ்ஞானி: மாணவர்கள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details