மயிலாடுதுறை: சீர்காழி அருகே சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் இளைஞர் கீர்த்திவாசன். இவர், ரத்த தானம் செய்பவர்கள் சங்கம் (Blood Donars Association) என்ற சேவை மையத்தை நடத்தி வருகிறார்.
நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சியாக இவர், இயற்கை தானியங்களை பயன்படுத்தி இந்திய தேசிய கொடியை உருவாக்கியுள்ளார்.
மூவர்ண தானியங்களால் தேசிய கொடி உலக சாதனை
இதற்காக, வெள்ளை சோள விதைகள், பச்சை பயிறை பயன்படுத்தி, 73.1 x 33.5 செ.மீ அளவில் இந்திய தேசிய கொடியை 3 மணி நேரம் 23 நிமிடங்கள் 21 நொடிகளில் உருவாக்கியுள்ளார்.
இளைஞரின் இந்த முயற்சியை ஜாக்கி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு புதிய உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் உலக சாதனைக்கான சான்றிதழ், விருதுகளை சீர்காழி வட்டாட்சியர் சண்முகம், கீர்த்திவாசனிடம் வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தின விழா: விருதுகளை வழங்கிய முதலமைச்சர்