தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா...!’ - வைரலாகும் காணொலி - எடப்பாடி பழனிசாமி

நாகப்பட்டினம்: அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி ஐயா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து கத்திய நாகை இளைஞரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

image
image

By

Published : Aug 28, 2020, 9:21 AM IST

கரோனா பரவலை முன்னிட்டு கல்லூரி இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இதனால் அரியர் வைத்திருந்த மாணவர்கள் பலர் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து அரியர் வைத்து தேர்வு எழுதாமலேயே தேர்ச்சிபெற்ற மகிழ்ச்சியில் மாணவர்கள் பலர், முதலமைச்சரை வாழ்த்தி கட் அவுட்டுகள் வைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும், மீம்ஸ்கள் பதிவிட்டு எனப் பல வகைகளில் தங்களது நன்றிகளைத் தெரிவித்துவருகின்றனர்.

நேற்று ’அரியர் மாணவர்களின் அரசனே ‘ என்று ஈரோட்டில் அரியர் மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் சமூக வலைதளங்களில் வைரலானது.

’அரியர் மாணவர்களின் அரசனே ‘

இந்நிலையில், நேற்று நாகை வந்த முதலமைச்சர் பழனிசாமி நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருவாரூர் செல்வதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காரில் வெளியே வந்தார். அதிமுக தொண்டர்கள் பலர் அங்கு குவிந்திருந்தனர்.

அப்போது காரில் அமர்ந்தபடி அவர்களைப் பார்த்து கையசைத்து வந்த முதலமைச்சரை நோக்கி, கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் ’அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா...’ என்று கத்தினார்.

’அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா...’

அதனை இன்முகத்தோடு ஏற்று சிரித்தபடி முதலமைச்சர் கடந்துசெல்லும் அந்தக் காட்சிப்பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: 'அரியர் மாணவர்களின் அரசனே' - முதலமைச்சருக்கு கட்அவுட் வைத்த அரியரியன்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details