மயிலாடுதுறை: ஓஎன்ஜிசி நிறுவனம் செப்.2 ஆம் தேதி ஒரு செய்திக்குறிப்பை வெளியிடப்பட்டது. அதில், அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரிப்படுகையில் எந்த ஆய்விலும் ஈடுபடவில்லை. ஷேல்ஆயில், ஷேல்மீத்தேன், நிலக்கரிப்படுகை மீத்தேன் உள்ளிட்ட எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல்களை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உறுதிபட மறுத்துள்ளது.
காவிரிப்படுகையில் ஓஎன்ஜிசி ஷேல் ஆய்வு செய்தது உண்மை - அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து காவிரிப் படுகை
ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரிப் படுகையில் ஷேல் ஆய்வு செய்தது உண்மையே என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மயிலாடுதுறையில் நேற்று (செப்.4) செய்தியாளர்களை சந்தித்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் த.ஜெயராமன், "அமெரிக்க நிறுவனமான கோனக்கோ பிலிப்ஸ் உடன் காவிரி படுகையில் ஷேல்ல் எண்ணெய், எரிவாயு இருப்பின் அளவை மதிப்பீடு செய்வதற்காக 2012ஆம் ஆண்டு ஒஎன்ஜிசி ஒப்பந்தமிட்டது. அதேபோல 2017ஆம் ஆண்டிலும் ஓஎன்ஜிசி, கோனகோ பிலிப்ஸ் இடையே ஒப்பந்தமிடப்பட்டது. ஓஎன்ஜிசி தனக்கு ஷேல்மீத்தேன் எடுக்கும் திட்டம் இல்லை என்று கூறுவது முற்றிலும் பொய்யானது. ஓஎன்ஜிசி நிறுவனம் காவிரிப் படுகையில் ஷேல்ஆய்வு செய்தது உண்மையே எனத் தெரவித்தார்.
இதையும் படிங்க:‘ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்’ - சீமான்