தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிவாயு குழாய் பதிக்க மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு எதிர்ப்பு - எரிவாயு குழாய் பதிப்பு

காவிரிப் படுகையில் எரிவாயு குழாய் பதிப்புகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

By

Published : Apr 6, 2022, 9:25 PM IST

நாகப்பட்டினம்:காவிரிப் படுகையில் எரிவாயு குழாய் பதிப்புகளைத் தடுத்து நிறுத்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதாவிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் மனு அளித்து வலியுறுத்தினர்.

இது குறித்து, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அளித்த கோரிக்கை மனுவில், “எண்ணூர் - தூத்துக்குடி எரிவாயுக் குழாய் பதிப்பு திட்டம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தற்சமயம் மயிலாடுதுறை வட்டம் நீடூர் அருகே வை.பட்டவர்த்தி கிராமத்தில் கிராமமக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் ராட்சத குழாய்களைக் கொண்டு வந்து அந்நிறுவனம் இறக்கியுள்ளது. இதேபோல், செம்பனார்கோயில் அருகே கடலி- திருவிளையாட்டத்திலும் ஐஓசிஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான குழாய்கள் கொண்டு வந்து அடுக்கப்பட்டுள்ளன.

காவிரிப்படுகை 2020ஆம் ஆண்டு பிப்.21ஆம் தேதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று சட்ட பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வயல்களின் ஊடாக குழாய் அமைப்பது காவிரிப்படுகையின் வேளாண்மையை முற்றிலுமாக பாதிக்கும்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்திற்குப் புறம்பான எந்தப் பணியும் இங்கே நடத்த அனுமதிக்கக்கூடாது. ராட்சத குழாய்களை மக்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து உடனடியாக அப்புறப்படுத்தி காவிரிப்படுகைக்கு வெளியில் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அப்போது, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் உரிமை இயக்கம், எஸ்டிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட தோழமை கட்சி மற்றும் அமைப்பினர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:Video : 'வந்து கவனித்துவிட்டு செல்' - வசூல் ராஜாவான காவலர், நேர்மையாகப் பதிலளித்த டிரைவர்!

ABOUT THE AUTHOR

...view details