மயிலாடுதுறை:ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மாலை நான்கு மணிக்கு வந்து வாயில் கதவுகளை மூடினர். அலுவலகத்தில் உள்ளே உள்ள நபர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை - மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
பொதுமக்களும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளே உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொள்வது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி:அர்ச்சகர் மீது போலீசில் புகார்!