தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் லஞ்சம் - ரூ.3.73 லட்சம் பறிமுதல்! - Anti-corruption department seizes 3 lakh 73 thousand rupees

நாகை: தமிழ்நாடு அரசின் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் லஞ்சம் : 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் லஞ்சம் : 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

By

Published : Jan 25, 2021, 6:57 AM IST

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் மருங்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா கறவைப் பசு வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு தலா 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் விலையில்லா பசு வழங்கப்பட்டது. அதில் கால்நடை பராமரிப்பு துறையின் அலுவலர்கள் ஒவ்வொரு பயனாளிகளிடமிருந்து 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் வசூல் செய்வதாக, நாகை லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புதுறையினர், மருங்கூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களை கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் சொக்கலிங்கத்திடமிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், கால்நடை மருத்துவர் முத்துக்குமரனிடமிருந்து 48 ஆயிரம் ரூபாய், மருங்கூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பிரான்சிஸ் மகேந்திரனிடமிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மருங்கூர் ஊராட்சி செயலாளர் பிரகாஷ்குமாரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் என 3 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர்.

தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபாலன் (பொறுப்பு) தலைமையில், ஆய்வாளர் ரமேஷ் குமார், அருள்பிரியா மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணை ஆட்சியர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன் முன்னிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெறுவதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:15 லட்சம் மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details