தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எதிர்க்கட்சியில் ஒரு பேச்சு... ஆளுங்கட்சியானதும் ஒரு பேச்சு - அண்ணாமலை விளாசல்

முதலமைச்சர் அறிவிக்கும் நிவாரணங்கள் மத்திய அரசு வழங்கும் நிதி என்றும் அதனுடன் மாநில அரசும் சேர்த்து கூடுதலாக நிவாரணங்களை வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Nov 17, 2022, 11:01 AM IST

Updated : Nov 17, 2022, 5:36 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

கொள்ளிடம் ஒன்றியம் கொடிக்கால் வெளி கிராமத்தில் கனமழையால் பாதித்த 120 குடியிருப்புகள் மற்றும் வெள்ள நீர் சூழந்த இடங்களை அண்ணாமலை பார்வையிட்டார். தொடர்ந்து வெள்ள சேதம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். கனமழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் 100 பேருக்கு அரிசி, காய்கறி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து நல்லூர், அகர வட்டாரம், வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை கண்ட அண்ணாமலை பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

திருவெண்காடு, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அண்ணாமலை தொடர்ந்து பூம்புகார் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் நிவாரணம் எந்த வகையிலும் போதாது என்றும், ஐயாயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என்றார். மேலும் எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது பயிர்கள் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆனால் தற்பொழுது பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் என்றார். வேலையில்லாமல் உள்ள குடும்பங்களுக்கு 30 நாட்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சாதாரண மக்கள் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என அண்ணாமலை தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்தது குறித்த கேள்விக்கு, தமிழக அரசு கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை என்றும், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அண்ணாமலை கோரிக்கை

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கால நீடிப்பு வழங்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, இதற்காக கருப்பு முருகானந்தம் தலைமையில் ஒரு குழு, இரண்டு நாட்களில் டெல்லி சென்று நிதி அமைச்சரையும், வேளாண் துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகை அனைத்தும் மத்திய அரசு கொடுக்கும் நிதியிலிருந்து வருவதாக தெரிவித்த அண்ணாமலை, மத்திய அரசின் நிதியோடு சேர்த்து மாநில அரசும் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள்... - பைடன் ஷாக்..!

Last Updated : Nov 17, 2022, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details