நாகப்பட்டினம்:கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் திமுக மாவட்டச் செயலாளர் கௌதமன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. படகில் இருந்தவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் இடதுபக்கத் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 28-07-2021 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை அத்துமீறி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் படகில் படுத்து தங்களை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளனர்.