மயிலாடுதுறை: சீர்காழியில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "2014ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் பாதிக்கபட்டனர். மீனவர் மீதான தாக்குதல் என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது.
தற்போது நீட் தேர்வு பயத்தால் 15 மாணவ செல்வங்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். தயவு செய்து மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை மேற்கொள்ளாதீர்கள். நீட்தேர்வை வைத்து அரசியல் செய்து மாணவர்களின் உணர்ச்சிகளை தூண்டி இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்.