நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 78ஆவது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஒருவார காலம் சிறப்புப் பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம் இன்று விடியற்காலை நான்கு மணிக்கு நடைபெற்றது. சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனம் பூசும் வைபவமும் சிறப்புத்துவா ஓதி வழிபாடும் நடைபெற்றன.