மயிலாடுதுறை: சீர்காழி தாலுக்காவில் கடந்த 11ஆம் தேதி அதீத கனமழை பெய்தது. இதன் காரணமாகச் சீர்காழி கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழை அளவு பதிவானது. சீர்காழியில் 44 செ.மீ, கொள்ளிடத்தில் 32 செ.மீ மழை அளவு பதிவானது.
இதனால் சீர்காழி தாலுக்கா பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிப்படைந்தது. கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், குதிரை குத்தி, காமராஜர் நகர், பகுதியில் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி விவசாய நிலங்களைப் பார்வையிட்டார்.
விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவித்தபோது, விவசாயி ஒருவர் அன்புமணி காலில் விழுந்து நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க வலியுறுத்தினார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் ஐந்து கிலோ அரிசி வழங்கினார். இதனை அடுத்து வேட்டங்குடி, நெய்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளைப் பார்வையிட்டு கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி விவசாயிகளிடம் அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார் அன்புமணி ராமதாஸ் இதையும் படிங்க:ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 - அரசாணை வெளியீடு!