தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகை பாஜக நிர்வாகியின் கல்லூரியில் பாலியல் தொல்லை; வெளியான பகீர் ஆடியோ... நடந்தது என்ன? - latest tamil news

நாகையில் பாஜக மாவட்டத் தலைவருக்குச் சொந்தமான கல்லூரியில், உடற்கூறியல் ஆசிரியர் ஒருவர் மாணவியை தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை பாஜக நிர்வாகி கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
நாகை பாஜக நிர்வாகி கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

By

Published : Dec 14, 2022, 11:08 PM IST

நாகை பாஜக நிர்வாகியின் கல்லூரியில் பாலியல் தொல்லை; வெளியான பகீர் ஆடியோ... நடந்தது என்ன?

நாகப்பட்டினம்: புத்தூர் பகுதியில் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் உடற்கூறியல் ஆசிரியராகப் பணிபுரிந்த சதீஷ் என்பவர், அங்கு பயிலக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ளக்கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை, ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் சதீஷ் மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு கண்டிக்க அழைக்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் மாணவியை கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைப்பதும், அந்த மாணவி ’வேண்டாம் சார். நான் வரல சார்’ என்று கெஞ்சுவதும், ’தனக்கு தற்போது மாதவிடாய்’ என்று சமாளித்தும் ’பரவாயில்ல வா. நான் பார்த்துகிறேன்’ என்று அழைக்கும் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பின்னர் இதுகுறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், கல்லூரி மாணவிகளிடம் சமரசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் பாஜக மாவட்டத் தலைவரும், கல்லூரியின் தாளாளருமான கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது.

சமூக நலத்துறை அதிகாரிகள் தற்பொழுது நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர். அங்கு படிக்க கூடிய மாணவிகளிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு, எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது ஆசிரியர் மாணவியை செல்போனில் பாலியல் ரீதியாக அழைத்தது உறுதிசெய்யப்பட்டது. இந்தச் சூழலில் ஆசிரியர் சதீஷை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

பேச்சுவார்த்தையில் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயன்

மேலும் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பலத் தரப்புகளிலும் கோரிக்கை எழுந்தது. ஆனால், மாணவியின் பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்படாத நிலையில், ஆசிரியரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கல்லூரி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாகை நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:13 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு பிறந்த குழந்தை - ஏற்க மறுத்த சிறுமியின் தந்தை

ABOUT THE AUTHOR

...view details