மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் சிறிய டீக்கடை முதல் பிரபல ஹோட்டல் வரை சுகாதாரமற்ற முறையில் இயங்குவது தொடர் கதையாக நீடித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே சின்ன கடை வீதியில் பிரபலமான குரு டீக்கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிப்பதாக நகராட்சி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்து உள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் இன்று நகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சீனிவாசன் தலைமையில் நகராட்சி சுகாதாரத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், பஜ்ஜி போண்டா உள்ளிட்ட உணவு பண்டங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது தெரிவ வந்தது. மேலும் எண்ணெய் மிகுந்த உணவு பண்டங்களை செய்தித்தாளில் வைத்து கொடுத்ததால் நகராட்சித் துறை அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைப்பதாக கூறி உள்ளனர்.
அப்போது அங்கு வந்த புளியந்தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் அமர்நாத் என்பவர் டீக்கடைக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அமர்நாத் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மாமுல் கேட்டதற்கு கொடுக்காததால் கடையை பூட்டி சீல் வைக்கிறீர்களா என்றும் சுகாதாரமற்ற முறையில் எத்தனையோ கடைகள் உள்ளது அங்கெல்லாம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கடையை பூட்டக்கூடாது என்று கூறி நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின், எதிரே இருந்த பழக்கடைக்கு சென்று சோதனை செய்து உள்ளனர். உணவு பாதுகாப்பு துறையின் சோதனையில் மாம்பழங்கள் ஆதலால் கடையை சீல் வைக்க உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சீனிவாசன் உத்தரவிட்டார். நகராட்சி துறையினர் கடைக்கு சீல் வைக்க முற்பட்டபோது அங்கு திரண்ட பொதுமக்கள் எதிரே உள்ள டீக்கடையை சீல் வைக்காமல் ஏன் இந்த கடையை மட்டும் சீல் வைக்கிறீர்கள் என்று கடை நிர்வாகி உட்பட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.