தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுச்சாலையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்! நாகை காவல்துறையினர் வலைவீச்சு - திமுக நிர்வாகி காரை உடைத்த அமமுக நிர்வாகிகள்

நாகப்பட்டினம்: குடிபோதையில் திமுக நிர்வாகி காரை உடைத்து நடுச்சாலையில் தகராறில் ஈடுபட்டு தலைமறைவான அமமுக நிர்வாகிகள் இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

குடிபோதையில் தகராறு செய்த அமமுக நிர்வாகிகள்!

By

Published : Sep 21, 2019, 6:53 PM IST

நாகை மாவட்டம், கீழ்வேளூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புருஷோத்தமன் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகளுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று புருஷோத்தமன் தனது காரில் நாகையில் இருந்து கீழ்வேளூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது வாகனத்தை வழிமறித்த அமமுகவைச் சேர்ந்த ஆழியூர் ரமேஷ், கருணாநிதி ஆகியோர் திடீரென அவரை தாக்க முயன்று கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், குடிபோதையில் இருசக்கர வாகனத்தை சாலையின் நடுவே சாய்த்து வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் நாகை கீழ்வேளூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திமக நிர்வாகியின் காரை உடைத்து அமமுக நிர்வாகிகள் கலவரம்

அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகி புருஷோத்தமன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ரமேஷ், கருணாநிதி ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நடுரோட்டில் குடிபோதையில் தகராறு செய்த அமமுக நிர்வாகிகளின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details