நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் ஆலயத்தில் சித்தரை மாதத் திருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த 8ஆம் தேதி தொடங்கிய இந்த தீ மிதித் திருவிழாவின் 8ஆம் நாளான்று, அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலம் வருவது வழக்கம். அதன்படி ஊர்வலம் நடத்தப்பட்டு, பல நாட்கள் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
சீதளாம்பிகை ஆலய தீ மிதித் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்! - festival
நாகை: மயிலாடுதுறை அருகே ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோயில் திருவிழா
கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி, அம்பாளை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோத, வானவேடிக்கைகளுடன் கோயில் திருவிழா களைக்கட்டியது.