தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே நாகையில் புயல் எச்சரிக்கை - Depression in Andaman

நாகப்பட்டினம்: காரைக்கால், நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் இன்று வெயில் சுட்டெரித்தது.

nagapattiam cyclone

By

Published : Nov 5, 2019, 11:01 PM IST

தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கு வடக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், தொடர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கவுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை ஏற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

நாகையில் ஏற்றப்பட்டுள்ள 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

அந்த வகையில், நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. எனினும், நாகை மாவட்டம் முழுவதும் இன்று வெயில் சுட்டெரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: கடல் ஆமை பாதுகாப்பு மையம்: ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details