தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத் திட்டம் - நாகை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை! - praveen p nair

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத் திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் பரிந்துரை செய்துள்ளார்.

பிரவீன்
பிரவீன்

By

Published : Jul 16, 2020, 5:45 PM IST

நாகை, கடலூர் மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. இதுதொடர்பாக, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக நேற்று(ஜூலை 15) மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று(ஜூலை.16) நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சுருக்குமடி, இரட்டைமடி வலையைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக, நாகை மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியத்துடன் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

50 விழுக்காடு மானியத்துடன், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசின் திட்டத்தின் கீழ் செவுள்வலை மற்றும் தூண்டில் மீன்பிடிப் படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பயன்பாட்டிலுள்ள இழுவைப் படகுகளை 15 லட்சம் ரூபாய் மானியத்துடன் ஆழ்கடல் மீன்பிடிப்பு செவுள்வலையாக மாற்றி கொள்ளலாம்.

இதுதொடர்பாக, மாவட்ட மீன்வளத்துறை அலுவலகத்தை அணுகி, மீனவர்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details