தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா கட்டுப்பாடுகளுடன் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு நடத்தவேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் - Vaitheeswaran Temple Kumbabhishekam

மயிலாடுதுறை: கரோனா கட்டுப்பாடுகளுடன் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு

By

Published : Apr 21, 2021, 4:23 PM IST

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் ஏழாம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்டது. இக்கோயிலின் குடமுழுக்கு ஏப்ரல். 29ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

29ஆம் தேதி குடமுழுக்கு

தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் உள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இந்த குடமுழுக்கு விழாவுக்கு சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்வை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 600 குருக்கள் தலைமையில் சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. 144 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜை நடைபெற உள்ளது.

கரோனா பரவும் அபாயம் உள்ளதால் குடமுழுக்கு நிகழ்வை தள்ளிவைக்க வேண்டும்." என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு இன்று (ஏப். 21) விசாரணைக்கு வந்தது.

எச்சரிக்கை விடுத்தஉயர் நீதிமன்றம்

அப்போது, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ,

"கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்படும். கோயில் ஊழியர்களை வைத்தே குடமுழுக்கு நிகழ்வு நடைபெறும். இந்த விழா நேரடியாக யூடியூப் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். அதன் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்வார்கள்" என தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி அனிதாசுமந்த் தெரிவிக்கையில்,

"கரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகள் மீறப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும், குடமுழுக்கு நிகழ்வை கண்காணிக்க கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படு்வார்" என நீதிபதி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details