தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நலவாரியத்தில் பதிவு செய்ய புதுப்பித்தல் மனு, இணையதள நடைமுறையின் குறைபாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

all union labour protest in mayiladuthurai, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மயிலை ஆர்ப்பாட்டம்
all union labour protest in mayiladuthurai

By

Published : Nov 18, 2020, 2:12 PM IST

மயிலாடுதுறை: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இணையவழி பதிவு, புதுப்பித்தல், கேட்புமனு சமர்ப்பித்தல் ஆகியவற்றை எளிமையாக்க வேண்டும், அதில் தொழிற்சங்க பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும், புதுப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் விடுபட்டு போன கரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முழக்கங்களாக முன்வைக்கப்பட்டது.

மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இடைக்காலத் தீர்ப்பின்படி இணையவழி செயல்பாடுகள் ஒரு சீரான நடைமுறைக்கு வரும் வரை பழைய நடைமுறையையும் பின்பற்ற வேண்டும், தொழிலாளிகளுக்கான ஓய்வூதியத் தொகை ரூபாய் 5000, கல்வி தொகை 3 மடங்காகவும், இயற்கை இறப்பு நிதி ரூபாய் ஒரு லட்சம், விபத்து மரணம் ரூபாய் 5 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details