மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது. காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
சாராயம் விற்பனை வாட்ஸப்பில் வைரல் - ஒருவர் கைது - மயிலாடுதுறை
மயிலாடுதுறை: சாராய விற்பனை செய்வது வாட்ஸ்அப்பில் பரவி வைரலானதையடுத்து சாராயம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சாராயம்
இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் சாரயம் விற்பனை நடைபெறுவதை ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டது வைரலானது. இது தொடர்பாக விசாரணையை காவல் துறையினர் நடத்தினர்.
அதனடிப்படையில், திருவிழந்தூர் அண்ணாநகர் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டது விஜயேந்திரன்(55) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.