நாகை மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராமங்களும் வணங்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பத்து நாள் திருவிழாவை மீனவர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
நாகையில் பூச்சொரிதல் விழா: பக்தர்கள் பூத்தட்டுகளுடன் பங்கேற்பு!
நாகை: அக்கரைப்பேட்டை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கைகளில் பூத்தட்டு ஏந்தி அம்மனை வணங்கினர்.
Breaking News
இந்நிகழ்வில் கீச்சாக்குப்பம் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாம்பூலம், பூ கூடைகளில் பூக்களை ஏந்தியவாறு மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பூக்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.