நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் உள்ளது. 2004ஆம் ஆண்டு வந்த சுனாமியின்போது சேதமடைந்த இந்தக் கட்டடம் சில தினங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பட்ட கல், மண்ணை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீட்டு வாசலில் கொட்டுவதற்கு அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த நாகை அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர், குடிபோதையில் கையில் அரிவாளுடன் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.