நாகை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக நகர செயலாளர் தங்க. கதிரவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாகையில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய அதிமுக வேட்பாளர் - AIADMK candidate launches election campaign
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் நாகை மாவட்ட அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன்.
AIADMK candidate launches election campaign in Nagai
இந்த நிலையில் இன்று (மார்ச்11) காலை நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளர் தங்க. கதிரவன் இன்று முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளார்.