நாகப்பட்டினம்:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவிந்தராஜ் நகரில் வசித்து வருபவர் முத்துவீரன் (82). இவருக்கு இரண்டு திருமணம் ஆகிய நிலையில் முதல் மனைவி இறந்ததால் இரண்டவது மனைவியுடன் வசித்து வருகிறார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், 2வது மனைவிக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள் என மொத்தம் 6 பிள்ளைகள் இருக்கின்றனர்.
அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் மனைவி இறந்ததால் முத்துவீரன் இரண்டாவது மனைவி ரமணியுடன் தனியே வசித்து வருகிறார். தனது மகன்கள் மற்றும் மகள்களுக்கு முத்துவீரன் சம்பாதித்து சேர்த்து வைத்த சொந்தமான நிலத்தை விற்று கிடைத்த ரூ.48 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணத்தை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்களுக்கு தலா ரூபாய் 6 லட்சமும் மேலும், மீதம் இருந்த பணத்தை பல தவணைகளில் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் சண்முகசுந்தரத்திடம் வழங்கியுள்ளார். மேலும் தன்னுடைய மகளான லதாவின் மகள் ராஜேஸ்வரியின் திருமணத்தின் போது 5 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், வயதான பெற்றோர்களை பிள்ளைகளை கண்டு கொள்ளமல் இருந்துள்ளனர். தந்தையிடம் கூடுதலாக பணம் பெற்ற சண்முகசுந்தரம் மட்டும் மாதம் 2000 ரூபாய் பணம் கொடுத்து தந்தைக்கு உதவி செய்து வந்துள்ளார். அவ்வப்போது மருத்துவ சிகிச்சையும் செய்து வந்துள்ளார்.