தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை - aged lady murdered for jewels

நாகை: மணல்மேடு காவல் நிலையம் அருகில் நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aged lady murdered for jewels in mayilai
aged lady murdered for jewels in mayilai

By

Published : Dec 22, 2020, 1:37 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்திட்டு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜானகி (வயது 72). கணவர் இறந்துவிட்ட காரணத்தால் இவர் மருத்துவரான தனது மகன் பாரிராஜனுடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜானகியின் வீட்டு பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் தங்க செயினை அறுத்து சென்றுள்ளனர்.

இன்று காலை வீட்டில் நிறுத்தி இருந்த பாரிராஜனின் காரை எடுக்க வந்த ஓட்டுனர் ஜான்சன், ஜானகியை பலமுறை அழைத்தும் வெளியில் வராததால், சந்தேகமடைந்து பின்பக்க வழியாக சென்று பார்த்துள்ளார். அப்போது ஜானகி கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாரிராஜன், மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், இந்த சம்பம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மணல்மேடு காவல் நிலையத்தின் மிக அருகிலேயே நடைபெற்ற இந்த கொலை சம்பவம் கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் மெடிக்கல் ரெப் கொலை? காவலர்கள் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details