தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கண்காணிக்கப்பட்ட 3,383 நபர்கள் விடுவிப்பு! - Nagappatinam district coronavirus cases

நாகை: மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்த 3,383 நபர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என்பதால், அவர்கள் அனைவரும் 28 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

நாகையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 3383 நபர்கள் விடுவிப்பு!
நாகையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 3383 நபர்கள் விடுவிப்பு!

By

Published : Apr 22, 2020, 4:44 PM IST

இது குறித்து அவர் கூறுகையில்,

“நாகை மாவட்டத்தில் 988 நபர்களிடம் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டன. அதில் 829 நபர்களுக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மீதமுள்ள 117 பேரின் முடிவுகள் நிலுவையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா நோய்தொற்று உறுதியான 44 பேரில் 7 பேர் குணமடைந்த நிலையில், மீதமுள்ள 37 பேர் தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று நாகை திரும்பியவர்கள் என 3,383 நபர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்திருந்தோம். இவர்கள் அனைவருக்கும் கரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத காரணத்தால், அவர்கள் 28 நாள்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் 726 சுகாதார பணியாளர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 31 ஆயிரத்து 227 வீடுகளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 154 பேருக்கு அறிகுறி இருக்கிறதா போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க:கள்ளத்தனமாகப் போதைப்பொருள்கள் விற்றவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details