கஜா புயலுக்குப் பின் மீண்டும் பூத்துக்குலுங்கும் நாகலிங்கப்பூ
நாகப்பட்டினம்: கஜா புயலிலிருந்து மீண்ட நாகலிங்க மரங்கள் தற்போது பூத்துக்குலுங்கத் தொடங்கியுள்ளன.
நாகலிங்கப்பூ
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஆய்மழை கிராமத்தில் அதிகளவு நாகலிங்க மரங்கள் காணப்பட்டன.
இவை 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலினால் சேதமடைந்தன. அவற்றில் மீண்ட ஐந்து மரங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன.
கோயில்களில் மட்டுமே காணப்படும் இந்த அரியவகை நாகலிங்கப்பூ, பார்ப்பதற்குப் பாம்புபோல காட்சியளிக்கும்.
இப்போது இந்த மரங்கள் பூத்துக் குலுங்குவதால் அப்பகுதி முழுவதும் நறுமணம் வீசிவருகிறது.