தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும்' - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! - protest

நாகை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனி மாவட்டமாக்க வேண்டும் - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

By

Published : Jul 10, 2019, 8:39 PM IST

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்த காலம்தொட்டு மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 50 வருடங்களாக மக்கள் போராடி வருகின்றனர். அதன்பின்னர் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம், திருவாரூர் ஆகியவை தனி மாவட்ட அந்தஸ்து பெற்றுள்ளன. மயிலாடுதுறை மக்களின் கோரிக்கை மட்டும் இன்னும் கனவாகவே நீடித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மயிலாடுதுறையை திருவாரூர் மாவட்டத்தோடு இணைக்கப் போவதாகவும், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப் போவதாகவும் வாட்ஸ்அப், முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகம்

மயிலாடுதுறையை திருவாரூர் மாவட்டத்தோடு இணைத்துவிட்டால், மக்களின் தனிமாவட்டக் கோரிக்கை கானல் நீராகிப்போகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details