தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள் - boycott

நாகை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.

நீதிமன்ற புறக்கணிப்பு

By

Published : Jul 22, 2019, 9:07 PM IST

நாகை மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை கோட்டத்தில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தின் நான்காவது நாளான இன்று மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட ஏழு நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால், நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

நீதிமன்ற புறக்கணிப்பு

புறக்கணிப்பைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள், சங்க பொறுப்பாளர்கள் இணைந்து மயிலாடுதுறை கோட்டாச்சியரிடம் தனி மாவட்டம் வேண்டி மனு அளித்தனர். மேலும், நாளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளர்.

ABOUT THE AUTHOR

...view details