நாகப்பட்டினம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ் இன்று (ஜன.30) காலை உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதனைக் கண்ட அவரது வாகன ஓட்டுநர் உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு!
நாகப்பட்டினம்: சீர்காழி இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்த நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த இரட்டை கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்ச்சியான விசாரணையில் ஈடுபட்டு, நேற்றிரவு குற்றவாளியின் உடல் உடற்கூராய்வு செய்யும் வரை சீர்காழியில் இருந்துவிட்டு, நாகை திரும்பிய நிலையில் இன்று (ஜன.30) காலை உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: இரட்டைக் கொலை வழக்கு: என்கவுன்டரில் இறந்த கொள்ளையன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!