தமிழ்நாடு முழுவதும் 'அதிமுக அரசை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெருந்தோட்டம் ஊராட்சியில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று (ஜன. 02) நடைபெற்றது.
மக்கள் கிராம சபைக் கூட்டம்: திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்! - nagai district news
நாகை: மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம் தலைமையில், பெருந்தோட்டத்தில் 'அதிமுக அரசை நிராகரிக்கிறோம்' மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாகப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
மக்கள் கிராமசபை கூட்டம்! திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்!
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் செ. ராமலிங்கம் தலைமையிலும் சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக சார்பிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என அதில் கலந்துகொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.