நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாகை மாவட்டம் 36ஆவது வார்டு கீரைக்கொல்லை தெருவில், அதிமுக பிரமுகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் வந்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக பிரமுகர் கைது! - அதிமுக
நாகை: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது சிக்கிய அதிமுக பிரமுகரிடமிருந்து பணம் ம்ற்றும் வாக்காளர் பட்டியலைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைவாக சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆய்வு மெற்கொண்டனர். அப்போது அதே பகுதியில், அதிமுக வார்டு செயலாளர் சிங்காரவேலு வீடு வீடாக பணம் கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அவரிடமிருந்த ரூ.59 ஆயிரம் பணத்தையும், துண்டு சீட்டில் எழுதப்பட்டிருந்த வாக்காளர்களின் பெயர் பட்டியலையும் போலிஸார் கைப்பற்றினர்.
தொடர்ந்து அதிமுக வார்டு செயலாளர் சிங்காரவேலுவை வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.