தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜிக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ. பவுன்ராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ பவுன்ராஜ் நலம்பெற சிறப்பு அபிஷேகம்! - ADMK parties offers prayer at temple
மயிலாடுதுறை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.பவுன்ராஜ் பூரண குணமடைய வேண்டி அக்கட்சி நிர்வாகிகள், ஸ்ரீ ஆயிரம் வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.
ADMK parties offers prayer at temple for MLA Pavunraj speedy recovery
இந்நிலையில், அவர் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள காலகஸ்திநாதபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆயிரம் வெற்றி விநாயகர் கோயிலில் அதிமுக சார்பில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், கீழையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் கபடி பாண்டியன், பாலு, லோகு, வேந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "கரோனா பணிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பூஜ்ஜியம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்