மயிலாடுதுறைமாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் தங்களை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து 300க்கும் மேற்பட்டோர் தங்களை அண்ணா திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஓ.எஸ். மணியன் சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ஓ.எஸ். மணியன் நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், “திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதியை கூறி ஆட்சியைப் பிடித்துள்ளார்கள் என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. அவர்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகளை ஐந்து விரல்களில் எண்ணிவிடலாம் என்று பேசினார்.