தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு! - Neermoore Panthal

மயிலாடுதுறை: கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கக்கப்பட்டது.

அதிமுக நீர்மோர்‌பந்தல்  மயிலாடுதுறையில் நீர் பந்தல் திறப்பு  அதிமுக நீர் பந்தல்  மயிலாடுதுறை பேருந்து நிலையம்  Mayiladuthurai Bus Stand  ADMK Neermoore Panthal opening in Mayiladuthurai  Neermoore Panthal  ADMK Neermoore Panthal
ADMK Neermoore Panthal opening in Mayiladuthurai

By

Published : Apr 15, 2021, 6:32 AM IST

கோடை வெயிலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுகவினர் நீர் மோர் பந்தலை பொது இடங்களில் திறந்துவருகின்றனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம், கிட்டப்பா அங்காடி ஆகிய இரு இடங்களில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று (ஏப். 14) திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்தார். அப்போது, பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்த அதிமுக எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்

தொடர்ந்து, குளிர்ச்சியூட்டும் இயற்கை பழச்சாறுகள், நீர் மோர்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:நீர்மோர்-தண்ணீர் பந்தலை தொடக்கிவைத்த அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details