தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இச்சூழலில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (அக்.31) இயற்கை எய்தினார்.
துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக நிர்வாகிகள்! - அமைச்சர் துரைக்கண்ணு மறைவு அதிமுக அஞ்சலி
மயிலாடுதுறை: பேருந்து நிலையம் அருகே வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அவரது மறைவிற்கு நாடு முழுவதும் அதிமுகவினரும், அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படம் பொருத்திய பேனர் வைக்கப்பட்டு, அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜிகே செந்தில்நாதன், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மெழுகுவைர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.
TAGGED:
aDMK executives pay homage