மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தமிழ்நாட்டு அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. கட்சித் தலைவர்கள் பரப்புரைக் கூட்டம், வேட்பாளர் அறிமுகக் கூட்டம் என மக்கள் பல்வேறு காட்சிகளை காண தொடங்கியிருக்கின்றனர்.
நான்கு மொழிகளில் பேசி கெத்து காட்டும் அதிமுக வேட்பாளர் - சரவணன்
நாகப்பட்டினம்: அதிமுக சார்பில் நாகை தொகுதியில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் சரவணன் நான்கு மொழிகளில் பேசி அசத்தியுள்ளார்.
இந்நிலையில், நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரவணன் களமிறங்குகிறார். அவரை அறிமுகம் செய்யும் கூட்டம் நாகையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு சரவணனை அறிமுகப்படுத்திவைத்தார்.
அப்போது தொண்டர்களிடம் சரவணன் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பேசி அசத்தினார். இதனால் பூரிப்படைந்த அதிமுக தொண்டர்கள் கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர். மேலும் பேசிய அவர், “மக்களவையில் சமயத்துக்கு ஏற்றாற்போல தேவைப்படும் மொழியில் பேசி மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பேன்” என்றார்.