நாகையிலுள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் நாகராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுவருகிறது. இந்நிலையில், நாகை ஒன்றிய வாக்குப் பெட்டியில் கீழையூர் ஒன்றிய வாக்குச்சீட்டு இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
திமுகவினர் மீது அதிமுக வேட்பாளர் புகார் மனு - திமுகவினர் மீது அதிமுக வேட்பாளர் புகார் மனு
நாகை: உரிய அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Nagai local body election counting
அப்போது, அங்கு திரண்ட திமுகவினர் வாக்கு எண்ணும் மைய அனுமதி அட்டை இல்லாமல் மையத்திற்குள் நுழைந்ததாகவும் இதனால் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகை ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் கணேஷ் மற்றும் அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: மோதலைத் தடுக்க வந்த காவலருக்கு அடி - வாக்கு எண்ணிக்கை மையத்தில் களேபரம்!