மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஆசைமணி போட்டியிடுகிறார். இவர், சீர்காழி தாலுக்காவிற்குட்பட்ட கிராமங்களில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சீர்காழியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு - மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீர்காழி பகுதியில் அதிமுக வேட்பாளர் ஆசைமணி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தீவர வாக்கு சேகரிப்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணி
சீர்காழி தாலுகா செம்மங்குடியில் வாக்கு சேகரிக்க தொடங்கிய ஆசைமணி, வடகால், எடமணல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர் பிவி.பாரதி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது, தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார். வேட்பாளர் ஆசைமணிக்கு அனைத்து கிராமங்களிலும் கூட்டணி கட்சியினர் சால்வைகள் அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.