மயிலாடுதுறை:தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று (ஜூன்.13) திறக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 843 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் தொடங்கியது. இதனையடுத்து, மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
மயிலாடுதுறை மகா தான தெருவில் உள்ள அரசு உதவி பெறும் தேசிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களை வரவேற்கப் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை அழைத்து வந்து வித்தியாசமாக வரவேற்பளித்தனர்.
காலை பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள் துதிக்கையை வைத்து ஆசீர்வாதம் செய்து வரவேற்பு அளித்தது. தொடர்ந்து மாணவர்கள் யானைக்கு மலர்களை தூவி வணங்கி மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்றனர். யானை மூலம் வரவேற்பளித்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
தொடர்ந்து மாணவர்கள் மீது யானை துதிக்கை மூலம் மலர்களைத் தூவி ஆசீர்வாதம் செய்தது. வித்தியாசமான இந்த வரவேற்பு மாணவர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
யானை மூலம் ஆசீர்வாதம்.. மாணவர்களை வரவேற்க பள்ளி நிர்வாகம் செய்த சிறப்பான செயல்.. இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் உற்சாகம்! கரோனா விதிகளை பின்பற்றி வகுப்புகள்