நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை மீன்வள அறிவியல், இளநிலை தொழில் நுட்பவியல், இளநிலை தொழில்சார் படிப்பு மற்றும் இளநிலை வணிக நிர்வாகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.
இதற்கு விண்ணப்பதாரர்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டிற்கான சேர்க்கை இணையதள வாயிலாக நடைபெற உள்ளது. இது சம்மந்தமாக இணைய தள விண்ணப்பத்தைப்பூர்த்தி செய்து வரும் 26ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
இளநிலைப் படிப்பில் மீனவ மாணவர்களுக்கு கூடுதல் இடம்! - Additional reservation for undergraduate studies
நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பில், மீனவ மாணவர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வரும் 29ஆம் தேதி வெளியிடப்படும். மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவின் கீழ் இளநிலை மீன்வள அறிவியல் ஆறு இடங்களும், இளநிலை மீன்வளப் பொறியியலில் இரண்டு இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இது குறித்த முழு தகவலறிய அருகே உள்ள மீன்வளப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அல்லது மையங்களைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை பெற www.tnjfu.ac.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். மேலும் விவரம் அறிய 04365256430 என்ற தொலைபேசியிலோ அல்லது 9442601908 என்ற செல்லிடைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.