மயிலாடுதுறை:தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பக்தர் மார்க்கண்டேயனுக்காக, காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளிய சிவபெருமான்,எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த புராண நிகழ்வை உள்ளடக்கிய திருத்தலமாக விளங்குகிறது.
இந்நிலையில் திருக்கடையூர் கோயிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். கோயில் கொடி மரத்தின் அருகே சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, குழந்தைகள் ஆராதனா மற்றும் குகன்தாஸ் ஆகியோர் கோ மற்றும் கஜ பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.