மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்வில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரிடம், "எப்போதும் பளபளவென ஷேப் செய்து பளீச்செனக் காட்சியளிக்கும் நீங்கள் ஏன் தற்போது தாடியுடன் உலா வருகிறீர்களே, இந்தத் திடீர் தாடியின் பின்னணி ரகசியம் என்ன" எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சரத்குமார், "மணிரத்னம் படத்தில் தற்போது நடித்துவருகிறேன். அந்தப் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. அதற்காகவே தாடி வளர்த்துள்ளேன். மேலும் நான் நடிகனாக மட்டும் இருக்கிறேன். நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.